ஆயுதங்களுடன் வீடியோ கல்லுாரி மாணவர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் நயினார்குளம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாளை. பகுதியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் ஜாதி மோதலை தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.இவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு வீடியோ எடுக்க உதவிய மேலும் 3 இளைஞர்களை தேடுகின்றனர்.