தமிழ் புதல்வன் திட்டத்தில் டெபிட் கார்டு வழங்கல்
விருத்தாசலம்: தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை, முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைக்கிறார்.இதன்காரணமாக, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சுரேஷ்குமார் மாணவர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்கினார்.துறை தலைவர்கள் கருணாநிதி, பசுபதி, தமிழரசி, பாலசங்கு, அண்ணாமலை, முருகேசன், சியாமளா, மகேசன், செந்தில்குமார், சுகந்தி, கண்ணகி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.