உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பில்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மைக் குழு மேற்பார்வையாளர் மாலினி தலைமை தாங்கி குழு, உறுப்பினர்களை கலந்தாய்வு செய்தார். தொடர்ந்து புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினராக, பழங்குடியினர் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தியன் தேர்வு செய்யப்பட்டார்.தலைவராக கல்பனா, துணைத் தலைவர் லட்சுமி உட்பட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி, நாகமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிவண்ணன், பேராசிரியர் அன்புநாதன், குழு உறுப்பினர்கள் முகிலன், பார்த்தசாரதி, கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்