உள்ளூர் செய்திகள்

மோசடி அழைப்புகளை எச்சரிக்கும் ஏஐ: ஏர்டெல்லில் அறிமுகம்

ஏர்டெல் நெட்வொர்க்கானது ஏஐ மூலமாக ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இப்புதிய சேவை தொடங்கப்பட்ட 12 நாட்களில் தமிழ்நாட்டில் 112 மில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும், 3 மில்லியன் ஸ்பேம் குறுஞ்செய்திகளையும் கண்டறிந்து தடுத்துள்ளது. இச்சேவையைப் பெற பிரத்யேக சேவையை கோரவோ அல்லது செயலியை பதிவிறக்கவோ தேவையில்லை.இது குறித்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமைச் செயல் அதிகாரி தருண்விர்மாணி கூறுகையில், இப்புதிய சேவையில் இரட்டை அடுக்கு பாதுகாப்பு உள்ளது. ஒன்று நெட்வொர்க் லேயரிலும் இரண்டாவது ஐடி சிஸ்டம்ஸ் லேயரிலும் உள்ளன. ஒவ்வொரு அழைப்பும், குறுஞ்செய்தியும் இந்த இரட்டை அடுக்கு ஏஐ தொழில்நுட்பம், ஸ்பேம் தகவல்களை அடையாளம் கண்டு எச்சரிக்கைத் தரும். இரண்டு மில்லி விநாடிகளில் 1.5 பில்லியன் செய்திகளையும் 2.5 பில்லியன் அழைப்புகளையும் இது கண்டறியும். மேலும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை தற்செயலாக கிளிக் செய்வதில் இருந்து பயனர்களை எச்சரிப்பதற்காக அதிநவீன ஏஐ அல்காரிதம் மூலம் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் ஸ்கேன் செய்யப்படுகிறது, என்றார்.மேலும் விவரங்களுக்கு: www.airtel.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்