உள்ளூர் செய்திகள்

தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கு புதிய தலைவர் தேர்வு

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் இராசேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த அக்.,24ம் தேதி அன்று கூடிய ஆட்சிக்குழுவும் பொதுக்குழுவும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் இராசேந்திரனை தேர்ந்தெடுத்துள்ளது. தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்குத் தலைவர்களாக இதுவரை அவினாசிலிங்கம், சுப்பிரமணியம், குழந்தைசாமி, பொன்னவைக்கோ ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் தமிழுக்கு கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டது. 1946ம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் தமிழ் வளர்ச்சி கழகத்தைஉருவாக்கினார்.கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும் குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளும் மருத்துவக் களஞ்சியம் 13 தொகுதிகளும் சித்தமருத்துவக் களஞ்சியம் 7 தொகுதிகளும் ஆங்கில மொழியாக்கம் 5 தொகுதிகளும் அறிவியல் தொழில் நுட்பக் களஞ்சியம் 5 தொகுதிகளும் மற்றும் குறுந்தகடுகளும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்