உள்ளூர் செய்திகள்

தலைமையின்றி தத்தளிக்கும் புதுப்பட்டி அரசு பள்ளி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்புகள் துவங்கி 5 மாதங்களாகியும் தலைமையாசிரியர் நியமனமின்றி, பள்ளி நிர்வாகம் தத்தளித்து வருகிறது.இப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், திறன் தேர்வுகளில் சாதித்து வருகின்றனர். இதனால் நகரில் முதன்மையான அரசு உயர்நிலைப்பள்ளியாக உள்ளது. தற்போது 700க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படிக்கின்றனர்.வகுப்புக்கு தலா நான்கு பிரிவுகள் உள்ளன. இப்பள்ளியை சிறப்பாக நிர்வகித்த தலைமையாசிரியர் கடந்த கல்வியாண்டில் ஓய்வு பெற்றார். அதன்பின் நடந்த ஆசிரியர் கலந்தாய்வில் இப்பள்ளி தலைமை ஆசிரியராக வர யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், இப்பள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியரே பணியில் உள்ளார்.பாடங்கள் எடுப்பதுடன் கூடுதல் பணி என்பதால் முன்பு போல் நிர்வாகப்பணிகள் நடைபெறவில்லை. சிறப்பான பள்ளியின் தொடர்வளர்ச்சிக்கு உதவும் வகையில் தலைமை ஆசிரியரின்றி நிர்வாகம் தத்தளித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்