உள்ளூர் செய்திகள்

மாணவ,மாணவிகள் டார்ச்சர்; மன உளைச்சலில் ஆசிரியர்கள்

கடலுார்: கடலுார் மாவட்டம், பலாப்பழ நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சிலர் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்வது, பின்னால் இருந்து கல்லால் அடிப்பது. பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றுவது. படிக்காமல் மற்ற மாணவர்களை சமுதாய சீர்கேடு விளைவிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது குறித்து பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்தனர்.பிரச்னைக்கு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கோஷ்டி பூசல் காரணமாக மாணவர்கள் மூலம் பிரச்னை எழுப்பி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளன. மாணவர்களின் வரிசையில் தற்போது மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்களை தாக்குவது கிண்டல் செய்வது உள்ளிட்டவைகளால் ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.கல்வித்துறை அதிகாரிகள் பிரச்னைக்கு காரணமானவர்களை களையயெடுக்க முன்வர வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்