உள்ளூர் செய்திகள்

படிக்கும்போதே கனவு காணுங்கள்: மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

சென்னை: படிக்கும் போதே மாணவர்கள் கனவு காண வேண்டும் என கவர்னர் ரவி கூறியுள்ளார்.தனியார் அமைப்பு சார்பில் மாணவர்கள் தீம் பார்க்கிற்கு செல்லும் பயணத்தை கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய, தேர்வு வீரர்கள் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது கவர்னர் ரவி கூறியதாவது: புத்தகங்கள் தான் உங்களை செதுக்கும். கல்விதான் உறுதியையும் திறமையையும் கொடுக்கிறது. கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமையை கொடுக்கும். படிக்கும் போதே கனவு காணுங்கள். கடுமையாக முயன்று கல்வி படிக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும்.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்