உள்ளூர் செய்திகள்

நம்ம கோவை சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்துகிறது மாநகராட்சி

கோவை: கோவை மாநகராட்சி சார்பில், நம்ம கோவை சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.சிட்டிசன் செயலி என்பது பொதுமக்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் மொபைல் செயலி. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக புகாரளிக்கலாம்; தீர்வுகளை காணலாம்.ஏதேனும் பிரச்னைகள் இருப்பின், செயலியில் பொதுமக்கள் பதிவேற்றம் செய்யலாம். அதேநேரம், இருப்பிடத்துக்கு அருகாமையில் நடக்கும் எந்தவொரு நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் பெறலாம். தன்னார்வலர்கள் நகர மேம்பாட்டுக்கு, தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சொத்து வரி, பிறப்பு - இறப்பு பதிவு போன்ற இணைய தளங்களை அணுகுவதற்கான லிங்க் வசதியும் தரப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட்டுகள், ரயில்வே ஸ்டேஷன், பூங்காக்கள், பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன்கள், தீயணைப்பு நிலையங்கள் பற்றிய, தகவல்களை பெறலாம்.கலையரங்கம், சமுதாய நல கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை இணைய வழி மூலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.சுற்றுலா செல்லும் இடங்கள்; அவற்றை பற்றிய தகவல்கள் பெறலாம். பதிவு செய்யப்பட்ட புகார்கள் நேரடியாக அதிகாரிகள் கவனத்துக்கு சென்று, சரி செய்ய உதவும். இச்செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும், என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்