மாணவ -மாணவியருக்காக எம்.டி.சி., சிறப்பு சேவை
சென்னை: பள்ளி மாணவ - மாணவியருக்காக, எம்.டி.சி., சார்பில் பேருந்துகளில் 50 சிறப்பு நடைகள் சேவை இயக்கத்தை, துணை முதல்வர் உதயநிதி நேற்று துவக்கி வைத்தார்.சென்னையில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும், 4.10 லட்சம் மாணவ - மாணவியருக்கு, எம்.டி.சி., சார்பில், இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள 25 பள்ளிகளின் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், தினமும், பஸ்சில் 50 சிறப்பு நடைகளை இயக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி திட்டத்தை துவக்கி வைத்தார்.