பூட்டான் நாட்டில் நர்ஸ் வேலை விண்ணப்பம் வரவேற்பு
சென்னை:பூட்டான் நாட்டின் சுகாதார அமைச்சக மருத்துவமனையில் பணிபுரிய, செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.இதுகுறித்து, தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:பூட்டான் நாட்டின் சுகாதார அமைச்சக மருத்துவமனையில் பணிபுரிவதற்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 23 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.இரண்டு முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் உள்ள செவிலியர்களுக்கு 65,000 ரூபாய், ஆறு முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு, 73,000 ரூபாய், 10 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு, 86,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.ஊதியம் மற்றும் பணி தொடர்பான விபரங்களை www.omcmanpower.tn.gov.in வாயிலாகவும், 63791 79200 மற்றும் 044 - 2250 2267 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/js2b341tf2tcpjn56 என்ற இணைப்பில் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் போன்றவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு நவ., 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.