புதிய கல்விக் கொள்கை: கல்வித்துறையில் விரைவான முன்னேற்றம்
சென்னை: புதிய தேசிய கல்விக் கொள்கை மாணவர்களில் ஆய்வுமனப்பான்மை, புதுமை மற்றும் சமூக பொருளாதார சமநிலையை வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறது.மத்திய அரசின் கல்வி சார்ந்த சமீபத்திய நடவடிக்கைகளால், நாட்டின் பள்ளிக் கல்வி துறையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மனப்பாடத்திலிருந்து புரிதல் அடிப்படையிலான கல்விக்குச் சென்றடைய பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. புதிய தேசிய கல்விக் கொள்கை சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்து, மாணவர்களிடையே ஆய்வுமனப்பான்மை மற்றும் புதுமை கலாச்சாரத்தை வளர்க்கும் நோக்கில் செயல்படுகிறது. 2025-26 மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக 1,28,650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இதில் 78,572 கோடி பள்ளிக் கல்விக்கே வழங்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 6-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், தொழில்நுட்ப ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்து வருகின்றன. அக்டோபர் 2025 நிலவரப்படி 10,000 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன; 1.1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். 2025-26 காலக்கட்டத்தில் 50,000 ஆய்வகங்கள் செயல்பாட்டில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிச் செல்ல புதிய தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்காற்றும் என குறிப்பிடப்படுகிறது.