பாதுகாப்பு வசதிகள் இருக்கா பள்ளி பஸ்களில் ஆய்வு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் 300 தனியார் பள்ளி பஸ்களை, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் ஆய்வு செய்தார்.மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துக்குட்பட்டு இயக்கப்படும், தனியார் பள்ளிகளின் 300 பஸ்கள் நேற்று மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன், மண்டல துணை வட்டாட்சியர் ரேவதி மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் அனில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.சத்தியகுமார் கூறுகையில், இந்த பஸ்களில் ஆவணங்கள், தீயணைப்பு கருவி, முன் மற்றும் பின் கேமரா இயக்கம், முதலுதவி பெட்டி, இருக்கைகள், அவசர கால வழி செயல்பாடுகள் ஓட்டுநர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என விழிப்புணர்வும் வழங்கப்பட்டது, என்றனர்.