உள்ளூர் செய்திகள்

குமரகுரு கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா

கோவை: குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரியின், நான்காவது பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவில், ஜெட்லைன் குழுமத்தின் தலைவர் ராஜன் நவானி பேசுகையில், “செயற்கை நுண்ணறிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை. அது தகவல் யுகத்தின் முடிவைக் குறிக்கலாம். ஆனால், அது மனித படைப்பாற்றல் யுகத்தின் புதிய துவக்கம். எந்திரங்களை மனிதர்கள் கட்டுப்படுத்த நமது உள்ளுணர்வும், படைப்பாற்றலும் அவசியம்,” என்றார்.எட்டு இளங்கலை, இரு முதுகலைப் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த, 408 மாணவர்கள் பட்டம் பெற்றனர். 2021 - 24 இளங்கலை மற்றும் 2022 - 24 முதுகலைப் பட்டதாரிகள், 27 பேர் பல்கலை தரவரிசை பெற்றதுடன், நான்கு பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்