கலசலிங்கம் பல்கலை.,யில் சமூக வானொலி நிலையம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் சமூக வானொலி நிலையம் 88.4 எப்.எம்., துவங்கப்பட்டது.இணைவேந்தர் அறிவழகி, துணைத் தலைவர்கள் சசிஆனந்த், அர்ஜுனன் கலுசலிங்கம் வாழ்த்தினர். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வானொலி நிலையத்தை திறந்து வைத்து பேசினர்.ஆராய்ச்சி துறை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன், விஷுவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் கற்பகசுந்தரம், ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றி நிகழ்ச்சியை நடத்தினர்.வானொலி நிலையத்திற்கு பயிற்சி, தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஒலிபரப்பு சேவைகள் வழங்குவதற்காக கோவை ஏர் மீடியா பிராட்காஸ்ட் சொலுஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த வானொலி நிலையம் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் ஒலிபரப்பாகும்.