உள்ளூர் செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளியில் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியருக்கான இயற்கையை போற்றும் பசுமை ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகல்வித் துறை மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் துறையின் 'பசுமை பள்ளிகள்' திட்டத்தின் கீழ், உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவியருக்கான இயற்கையை போற்றும் பசுமை ரங்கோலி கோலம் வரையும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர் காய்கறிகள், பழங்கள், இலைகள் மற்றும் பூக்களை பயன் படுத்தி 50க்கும் மேற்பட்ட அழகிய ரங்கோலி கோலம் வரைந்தனர்.இதில், வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக விதைகள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதி, முரளி ஆகியோர் பங்கேற்றனர்.பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் துர்கா, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன், விதைகள் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை சரண் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்