உள்ளூர் செய்திகள்

கோகுலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவில் கருத்தரங்கம்

சேலம்: சேலம், நெய்க்காரப்பட்டி அருகே உள்ள, ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லூரியில், 'பெண்களின் ஆரோக்கியம் ஆரோக்கியமான தேசத்திற்கான தூண்' தலைப்பில், மாநில அளவில் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது.இளமைக்கால பெண்களின் ஆரோக்கியம், கர்ப்பகால ஆரோக்கியம், பிரசவத்துக்கு பிந்தைய ஆரோக்கிய சவால்கள், 'மெனோபாஸ்' காலத்துக்கு பிறகும் ஆரோக்கிய பராமரிப்பு அவசியம், பெண்களுக்கான சத்துணவு, மனநலம் மற்றும் பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான அரசின் முன்னெடுப்புகள் ஆகிய தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர். இதன் நிறைவு விழாவில், கல்லூரி மேலாண் இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து தலைமை விருந்தினராக, சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரி, 'டீன் - அகடமிக்ஸ்' டாக்டர் அகிலாண்டேஸ்வரி பேசினார்.கல்லூரி முதல்வர் தமிழரசி, துணை முதல்வர் காமினி சார்லஸ், பேராசிரியை கனகதுர்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில், 250க்கும் மேற்பட்ட செவிலியர்கள், செவிலிய துறை சார்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்