உள்ளூர் செய்திகள்

ராணுவ பயிற்சி மையத்தில் அச்யுதா பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பள்ளி என்.சி.சி., மாணவர்கள் 25 பேர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தை பார்வையிட்டனர். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி ஆலோசனையின் பெயரில் 14வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் வழிகாட்டுதலில் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் போர் பயிற்சி, மலையேற்ற பயிற்சி, ஜிம்னாஸ்டிக்ஸ், கயிறு ஏறுதல் பயிற்சியை மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும், ராணுவ பயிற்சி மையம், தோற்றம், பரிணாம வளர்ச்சி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு மலையேற்ற பயிற்சி பெற்றனர். பள்ளி முதன்மை முதல்வர் சந்திரசேகரன், என்.சி.சி., ஆசிரியர் ரகு, ஆசிரியை சரஸ்வதி, 14வது பட்டாலியன் நிர்வாக அலுவலர் நவநீதகிருஷ்ணன், மேஜர் ஆறுமுகம், சுபேதர் காளிதாஸ் என்.சி.சி., உதவிகள் செய்தனர்.ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோச்சனா, பிரபா, அருண் ஷோரி, விஜயசாந்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், முதன்மை மேலாளர் பிரபாகரன், துணை மேலாளர் ஜான் கிறிஸ்டோபர் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்