மேற்கு வங்க பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்
கொல்கத்தா: பள்ளிகளில் காலை பிரார்த்தனையின் போது, 'வந்தே மாதரம்' பாடல் பாடுவதை கட்டாயமாக்கி மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து மாநில பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 'மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை பிரார்த்தனை கூட்டத்தில் தேசப்பாடலான, 'வந்தே மாதரம்' கட்டாயம் பாடப்பட வேண்டும்.இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதை, 'வீடியோ' மூலம் உறுதிபடுத்த வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு முன், மேற்கு வங்க பள்ளிகளின் பிரார்த்தனை கூட்டங்களில் தேசிய கீதமான, 'ஜன கண மன' மட்டுமே பாடப்பட்டு வந்தது.