கல்வியும் விடா முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்
அன்னூர்: அன்னூரில், நித்தில்யம் சிறப்பு பள்ளியில், ஆட்டிசம் பாதித்த மாணவர்கள் திருக்குறள் கூறும் குறளோசை நிகழ்ச்சி நடந்தது.இதில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், கல்வியும், விடா முயற்சியும் இருந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கல்வியுடன் ஒழுக்கம் மிக முக்கியம், என்றார்.இதையடுத்து, கணித விடுகதை தெரிவித்து, சரியான பதில் தெரிவித்தவர்களுக்கு, சன்மானம் வழங்கினார். கலை நிகழ்ச்சி நடந்தது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் திருக்குறள் வாசித்து அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நித்தில்யம் அறக்கட்டளை தலைவர் காயத்ரி சம்பத் பேசுகையில், “ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் சிறப்பு பள்ளிகளில் பயிற்சி முடித்து வெளியே வரும் போது அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்களும், தமிழக அரசும் முன்வர வேண்டும்,” என்றார்.அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.