உள்ளூர் செய்திகள்

டெட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பு மாற்ற வேண்டும்

கோவை: நடுநிலை, உயர்நிலை வகுப்பு கையாளும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தாள் 2 தேர்வு நேற்று 23 மையங்களில் நடந்தது.6,501 பேருக்கு, ஹால் டிக்கெட் வழங்கிய நிலையில், 321 ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. கணிதம், அறிவியல் பாடங்கள், எளிதாக இருந்ததாகவும், சைக்காலஜி கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பு செயலாளர் அருளானந்தம் கூறுகையில், “தேர்வு ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக நடத்தப்படுகிறது. எனவே, முக்கிய பாடங்கள், துணைப்பாடங்கள், சைக்காலஜி ஆகியவற்றில் இருந்து மட்டும் கேள்விகள் இருக்குமாறு, வினாத்தாள் தயாரிப்பு முறையை மாற்ற வேண்டும். குறிப்பாக, அறிவியல் பாட ஆசிரியராக இருந்தால், அறிவியல் பாடத்திற்கு 60 மதிப்பெண், கணிதத்திற்கு 30, தமிழ் அல்லது ஆங்கிலத்திற்கு 30; சைக்காலஜிக்கு 30 என பிரித்து 150 மதிப்பெண்கள் வழங்கலாம்.ஆனால், மொழிப்பாடங்கள் இரண்டிலுமே தேர்வு நடத்தப்படுகிறது. அந்தந்த பாடம் கையாளும் ஆசிரியர்கள், மற்ற பாடங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க மாட்டார்கள். இக்கோரிக்கையை தேர்வுக்கு முன்பே வைத்தும், பழைய முறைப்படியே கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த முறை குறைகளை களைய வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்