உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

கரூர்: மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:முதல் வகுப்பிலிருந்து, முதுகலை பட்டம் வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 2,000 ரூபாய், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 6,000 ரூபாய், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 8,000 ரூபாய், இளங்கலை பட்டம் 12,000 ரூபாய், தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம், 14,000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 9 முதல் பிளஸ் 2 வரை 3,000 ரூபாய், இளங்கலை பட்டம், 5,000 ரூபாய், முதுகலை பட்டம், 6,000 ரூபாய் பெற விண்ணப்பிக்கலாம்.ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் பயின்று வரும் மாற்றுத்திறனாளி, முந்தைய ஆண்டு இறுதி தேர்வில் குறைந்தபட்சம், 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வேறு ஏதேனும் துறையிடமிருந்து உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். https://www. tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு, மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். டிச., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்