பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேசிய நுகர்வோர் பயிலரங்கம்
சென்னை: சென்னை அடுத்த கவுரிவாக்கம், பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'விழிப்புணர்விலிருந்து செயல்பாட்டிற்கு: சூழல் உணர்வுள்ள நுகர்வோரை உருவாக்குதல்' எனும் தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கம் நடத்தப்பட்டது.கல்லுாரி நிர்வாகமும், தமிழக குடிமைப்பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கோபிநாத் பேசியதாவது:சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வெறும் தகவலோடு நின்றுவிடாமல், அன்றாடச் செயல்பாடாகவும், தொடர் பழக்கமாகவும் மாறும்போது மட்டுமே, நுகர்வோர் பாதுகாப்பு சாத்தியம்.தகுந்த அறிவியல் சான்றுகளின்றி, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என போலி விளம்பரம் செய்து ஏமாற்றுவது சட்டப்படி குற்றம். அதனால், உணவு உள்ளிட்ட பொருட்களின் மீது நாம் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் விஷ்ணுகார்த்திக், பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் சுற்று வட்டாரப் பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பயிலரங்கில் பங்கேற்றனர்.