உள்ளூர் செய்திகள்

கழிவுகளை பிரித்தால் காசாக்கலாம்: பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அன்னூர்: காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆகஸ்ட் 25ல் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அன்னூர் சசூரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், கழிவுகளை நான்கு வகையாக பிரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட அலுவலர் அப்துல் வஹாப் பேசுகையில், குப்பைகளை முறையாக பிரித்தால், பல தொழில் நிறுவனங்கள் அவற்றை தங்களது தொழில் தேவைகளுக்காக, பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. சாலை அமைத்தல், சிமென்ட் பேக்டரி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, தரம் பிரித்து, சுத்தப்படுத்தப்பட்ட கழிவுகள் பயன்படுகின்றன. மாணவ, மாணவியர், தங்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து தர, தங்கள் பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும், என்றார்.ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, ஓரைக்கால்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்