உள்ளூர் செய்திகள்

சாதித்த மாணவியருக்கு எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரியில் பாராட்டு

சென்னை: ஆசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று, நாட்டுக்கும் கல்லுாரிக்கும் பெருமை சேர்த்த எம்.ஓ.பி., வைஷ்ணவ் மகளிர் கல்லுாரி மாணவியருக்கு, கல்லுாரி நிர்வாகம் சார்பில், நுங்கம்பாக்கத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.விழாவில், ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டில் சாதனை படைத்த முன்னாள் மாணவியர் பரணிகா, நந்தினி மற்றும் இன்னாள் மாணவி அபிநயா உட்பட ஐந்து பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கல்லுாரியின் முதல்வர் அர்ச்சனா, உடற்கல்வி இயக்குனர் அமுதா உள்ளிட்டேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்