உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., தேசிய நீச்சல் எஸ்.ஆர்.எம்., மாணவர் அபாரம்

சென்னை: சி.பி.எஸ்.இ., தேசிய நீச்சல் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர் கயான் நத்தெல்லா 4 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்தது.இதில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ., அணிகள் பங்கேற்றன. இதில் தமிழகத்தின் சார்பில் சென்னை எஸ்.ஆர்.எம்., பொதுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் கயான் நத்தெல்லா, 13 என்பவர் பங்கேற்றார்.இவர், 50 மீ., மற்றும் 200 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும், 100 மீ., பேக் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ., பிரீஸ்டைல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கமும் வென்று, மொத்தம் நான்கு பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்