உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தபால் துறை குறித்து விளக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், உலக தபால் தினத்தையொட்டி தபால் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அஞ்சலக தலைமை அலுவலர் ராஜம், செல்வ மக்கள் சேமிப்பு திட்டம், மாணவர்களுக்கான பி.பி.எப்., சேமிப்பு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.அஞ்சலக ஊழியர் காவ்யா, தபால்களின் வகைகள் குறித்தும், அவசர தபால், மணியார்டர் குறித்தும் பேசினார். தலைமையாசிரியர் ரஷ்யா பீபி, தந்தி, கடிதம், அஞ்சல் அட்டை போன்றவை தற்போது பயன்பாட்டில் இல்லாதவை குறித்தும் விளக்கினார். தபால் தினம் கொண்டாடுவதன் அவசியம் குறித்து ஆசிரியர் சித்ரா விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்