உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுக்கு ஓவிய போட்டி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடந்தது.இதில், 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'இயற்கையை நேசிப்போம்' என்ற தலைப்பிலும், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'மழைநீர், நம் உயிர் நீர்' என்ற தலைப்பிலும், இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில், 60 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரு பிரிவுகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் டெய்சிராணி, வட்டார கல்வி அலுவலர் பாபு ஆகியோர் பேசினர்.தமிழக தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயண மூர்த்தி மற்றும் மிருணாளினி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். வரலாற்று குழுவினர் சரவணகுமார், ராமச்சந்திரன், மனோகரன், தமிழ்செல்வன், லாசிமா பேகம், பாலாஜி, கலைவாணி, சுமதி உள்பட பலர் பங்கேற்றனர். காப்பாட்சியர் சிவகுமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்