டி.என்.பி.எஸ்.சி., வழங்கும் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணி வாய்ப்புகள்
டி.என்.பி.எஸ்.சி., வழங்கும் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணி வாய்ப்புகள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வுக் குழுமம் எனப்படும் டி.என்.பி. எஸ்.சி.,யின் சார்பாக பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கு மொத்தம் 79 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. வயது வரம்புடி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் உள்ள சலுகைகளைப் பற்றி அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். கல்வித் தகுதி டி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கு பி.சி.ஏ., அல்லது பி.எஸ்.சி.,யில் உயிரியல், வேதியியல், அப்ளைடு கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதம், அப்ளைடு மேதமேடிக்ஸ், இயற்பியல், அப்ளைடு பிசிக்ஸ், புள்ளியியல், அப்ளைடு ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் அல்லது பி.இ., அல்லது பி.டெக்.,கில் அக்ரிகல்சுரல், இரிகேஷன் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முழு விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். தேர்ச்சி முறைடி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும். எழுத்துத் தேர்வு, நடக்கும் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற மூன்று நிலைகளில் இந்தப் பதவிக்கு தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் தகுதியைப் பொறுத்தமட்டில் ஆண்கள் குறைந்த பட்சம் 163 செ.மீ., உயரமும் 84 செ.மீ.,க்கு குறையாத மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். மூச்சை இழுத்த நிலையில் மார்பு விரிவது குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை உயரம் குறைந்த பட்சம் 150 செ.மீ., யும், 79 செ.மீ., அளவு குறைந்த பட்ச மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். மூச்சை இழுத்த நிலையில் மார்பு விரிவது குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும். உடல் தகுதித் தேர்வுடி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு ஒன்று பிரத்யேகமாக நடத்தப்படும். இதில் ஆண்கள் 25 கிலோ மீட்டர் தூரத்தையும், பெண்கள் 16 கிலோ மீட்டர் தூரத்தையும் 4 மணி நேரத்துக்குள் நடக்க வேண்டும். இந்தத் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும். இதே போல் காடுகள் அடர்ந்த சூழலில் பணி புரியும் உடல் தகுதி இருப்பதனை உறுதி செய்யும் சிறப்பு மருத்துவத் தேர்வும் நடத்தப்படும். விண்ணப்பிக்கும் முறைடி.என்.பி.எஸ்.சி.,யின் பாரஸ்ட் அப்ரென்டிஸ் பணிக்கான விண்ணப்பங்களை ரூ.100/ மட்டும் செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்களிலிருந்து பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.130/ஐக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த விண்ணப்பங்களைப் பெற ரூ.12/ஐ அஞ்சலகத்திற்கான சேவைக் கட்டணமாக அனைவருமே செலுத்த வேண்டும். இதர சலுகைகள் பற்றி அறிய இணைய தளத்தைப் பார்க்கவும். ஆன்லைனில் பதிவு செய்ய விரும்புபவர்கள் "போஸ்டல் ரசீது" முறையில் பணத்தைச் செலுத்த வேண்டும். அனைத்து விதங்களிலும் முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 23.12.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இந்தப் பதவி குறித்த முழு விபரங்கள் விண்ணப்படிவத்தை வாங்கும் போது கிடைக்கும் இணைப்பிலும் வழங்கப்படும். முகவரிController of Examinations,Tamil Nadu Public Services Examination,No.1, Greams Road, Commercial Taxes Office Annex Building,Chennai - 600 006. முக்கிய தேதிகள்விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள்: 23.12.2010ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இறுதி நாள்: 21.12.2010இணைய தள முகவரி: "www.tnpsc.gov.in"