மாநில மருத்துவ கல்வியில் சீர்திருத்தம்: எம்.ஜி.ஆர். பல்கலை
கல்வியில் ஆர்வமுள்ள மருத்துவ முதுநிலை பட்டதாரிகள், டி.எம். தேர்வு வடிவமைப்பிற்கான ஆலோசனைகளை வழங்கலாம் என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ கல்வியில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள எம்.ஜி.ஆர். பல்கலை எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த முடிவு என்று பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மருத்துவமனைகளை கல்வி நிறுவனங்களாக அங்கீகரித்து, இளம் மருத்துவ நிபுணர்களுக்கு துணை-சிறப்பு உதவித் தொகைகளை வழங்கும் திட்டமும் இதன் ஒரு பகுதியே. இதைத்தவிர மருத்துவ மாணவர்கள், தொடர்ந்து வரும் மருத்துவ கல்வி திட்டங்களில் பங்கேற்பது மற்றும் கட்டுரைகளை ஜர்னல்களில் வெளியிடுவதும் அவசியம். மேலும் ஆராய்ச்சி உதவித்தொகைகள் முதுநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.