சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில் 1,284 பங்கேற்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வில், 1284 பேர் பங்கேற்றனர்.புதுச்சேரியில் காவல் துறையில் 70 சப் இன்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதில், லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 4 மையங்களில் நடந்தது.இதில், முதல் தாள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 02:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை நடந்தது.இத்தேர்விற்கு, உடற் தகுதி மூலம் 1,317 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 1,284 பேர் தேர்வெழுதினர்; 33 பேர் ஆப்சென்ட்.முன்னதாக, தேர்வர்கள், காலை 08:00 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வந்தனர். தேர்வு எழுத சென்றவர்களை, மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது.தேர்வு மையத்திற்குள் மொபைல் போன், புளு டூத், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டது.இன்டர்நெட் சேவைகளை தடுப்பதற்கு ஜாமர் கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் தேர்வு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.