உள்ளூர் செய்திகள்

‘மாணவர் போலீஸ் கெடிட்’ திட்டம் மார்ச் 2ல் துவக்கம்

பெங்களூரு: கர்நாடக காவல் துறை வடிவமைத்துள்ள, ’மாணவர் போலீஸ் கெடிட்’ (எஸ்.பி.சி.,) திட்டம், வரும் மார்ச் 2ம் தேதி, துவங்கப்பட உள்ளது. போலீஸ் நடைமுறையை, மக்களுக்கு நண்பனாக செயல்படுத்தவும், பள்ளி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு நோக்கிலும், என்.சி.சி., போன்று, கர்நாடகாவில், ’எஸ்.பி.சி.,’ திட்டத்தை செயல்படுத்த, அரசு முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும், மாணவ, மாணவியருக்கு, போலீஸ் பயிற்சி அளிக்கப்படும்; பின், அவர்கள் போலீசாருடன் இணைந்து, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இத்திட்டத்துக்கு முதற்கட்டமாக, உயர் பள்ளி அளவில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும், இரு ஆசிரியர்கள், சமுதாய போலீஸ் அதிகாரி (சி.பி.ஓ.,) மற்றும் உதவி சமுதாய போலீஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கண்டீரவா விளையாட்டு அரங்கில், மார்ச் 2ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, இந்த எஸ்.பி.சி., திட்டத்தை துவக்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட பாட புத்தகத்தை, அமைச்சர் ஜார்ஜ் வெளியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்