உள்ளூர் செய்திகள்

பள்ளி பராமரிப்புக்கு முதற்கட்ட நிதி கோவைக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 30 மாணவர்களுக்கும் கீழ் இருந்தால் 10 ஆயிரம், 31-100 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளுக்கு 25 ஆயிரம், 101- 250 மாணவர்கள் படித்தால் 50 ஆயிரம், 251-1,000 மாணவர்கள் வரை படிக்கும் பள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரத்துக்கும்மேல் மாணவர்கள் கொண்ட பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய், பள்ளி பராமரிப்பு நிதியாக விடுவிக்கப்படுகிறது.இத்தொகையில், சிறு பழுதுகள் சீரமைத்தல், அலுவலக, பராமரிப்பு பணிகள், ஆய்வக பொருட்கள் என, எந்தெந்த செலவினங்கள் மேற்கொள்ள வேண்டுமென, பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதோடு, பராமரிப்பு நிதியில், 10 சதவீதம்துாய்மை பணிகளுக்கு கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், 1,205 பள்ளிகளுக்கு 2 கோடியே 13 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் பராமரிப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட நிதியை, இம்மாத இறுதிக்குள் அடிப்படை தேவைகள், பழுதுபார்க்கும் பணிகளுக்கு செலவிட உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மேலாண்மை குழுவின் வங்கி கணக்கு எண்ணில், முதற்கட்ட பராமரிப்பு நிதி விரைவில் பரிமாறப்படும். அனைத்து செலவினங்களுக்கும், ரசீது இணைக்க வேண்டும். கழிவறை துாய்மை பொருட்கள் வாங்க, ஒதுக்கிய நிதியில், 10 சதவீதம் கட்டாயம் பயன்படுத்தியிருக்க வேண்டும். இத்தொகையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், அக். மாதம் ஆய்வு செய்யப்படும். அரையாண்டு தேர்வு சமயத்தில், இரண்டாம் கட்ட நிதி பள்ளிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.350 ஈராசிரியர் பள்ளிகள்!பள்ளி பராமரிப்பு நிதி, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 350 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், 30க்கும் குறைவான மாணவர்களே படிப்பது தெரியவந்துள்ளது. இங்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வகுப்புகள் கையாள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு பின், சில அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால்,ஈராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக, புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்