உள்ளூர் செய்திகள்

தேசிய இளைஞர் விருது: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

விருதுநகர்: "சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜன. 12 சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான சிறப்பாக பணியாற்றிய இளைஞர்கள் (13 வயது முதல் 35 வரை) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013 ஏப்.1 முதல் 2014 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் இளைஞர் நல பணிகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இளைஞர் (தனி பிரிவு) தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல், தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக்கூடாது. மத்திய, மாநில, பல்கலை மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்த விருது பெற விண்ணப்பிக்க கூடாது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், "சங்க பதிவு சட்டப்படி தொண்டு நிறுவனம் பதிவு பெற்றிருக்க வேண்டும். நிர்வாகக்குழு அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்தி குறிப்பு, இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் ஆற்றிய தொண்டிணை தெளிவுபடுத்திய கருத்துருக்கள், மூன்று நகல்களுடன் ஜூலை 31க்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்