உள்ளூர் செய்திகள்

குமரி மாணவிக்கு இரண்டாம் இடம்: மறுகூட்டலில் 7 மதிப்பெண் கூடுதல்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் கவுசல்யா. இவர் அல்போன்சா மேல்நிலைப் பள்ளி யில் படித்து வருகிறார். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவருக்கு 491 மதிப்பெண் கிடைத்தது. பாடவாரியாக தமிழ்-98, ஆங்கிலம்-100, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-93 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, சமூக அறிவியல் பாடத்தில் தனக்கு நிச்சயம் 100 மதிப்பெண் கிடைக்கும் என உறுதியாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். இதற்கான முடிவு நேற்று நாகர்கோவிலில் முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வெளியானது. இதில் கவுசல்யாவிற்கு 100 மதிப்பெண் கிடைத்தது. ஏற்கனவே உள்ள 93 மதிப்பெண்ணில் இருந்து கூடுதலாக 7 மதிப்பெண் அதிகம் பெற்று அவர் 100 மதிப்பெண் பெற்றார். இதன் மூலம் கவுசல்யாவின் மொத்த மதிப்பெண் 491ல் இருந்து 498 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கவுசல்யாவுக்கு குமரி மாவட்ட அளவில் முதல் இடமும் மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு அரசு தரப்பில் கிடைத்த பாராட்டு இவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மைக்கல்வி அலுவலர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்