உள்ளூர் செய்திகள்

தொழிற்பூங்கா, ஒருங்கிணைந்த நகரம் தங்கவயலில் 973 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

தங்கவயல்: தங்கவயலில் பெமல் தொழிற்சாலை வசம் இருந்த 973 ஏக்கர் நிலத்தில் தொழிற்பூங்கா, ஒருங்கிணைந்த நகரம் ஏற்படுத்துவதற்கான அரசாணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெமல் தொழிற்சாலை, தங்கவயலில் இயங்கிவருகிறது. இந்த தொழிற்சாலை துவக்கப்பட்ட காலகட்டத்தில் இதற்காக ஏராளமான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது.இந்த நிலங்களை 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தாமல் இருந்தால், மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வரை பயன்படுத்தாமல் தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் இருந்த 973 ஏக்கர் காலி நிலத்தை கர்நாடக அரசு திரும்ப பெற்றது.இந்த நிலத்தில் புதிய தொழிற்பூங்கா ஏற்படுத்த வேண்டுமென, மாநில அரசிடம் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கோரிக்கை விடுத்திருந்தார். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, மாநில தொழில் துறை அமைச்சராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், தொழிற்பூங்கா அமைப்பது குறித்து இங்கு ஆய்வு செய்தார்.அதன் பின்னர், தொழில்துறை அமைச்சராக இருந்த முருகேஷ் நிரானியும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை தங்கவயலில் தொழிற்பூங்கா அமைக்க சட்டசபையில் ஒப்புதல் அளித்தார்.பின்னர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுஅமைந்தது. மாநில பட்ஜெட்டில் தங்கவயலில் தொழிற்பூங்கா ஏற்படுத்துவதாக முதல்வர் அறிவித்தார். மாநில வருவாய்த் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் தொழிற்பூங்கா 673 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலம் கே.ஐ.ஏ.டி.பி., என்ற கர்நாடக தொழிற்பேட்டை அபிவிருத்தி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.தவிர 294 ஏக்கரில் ஒருங்கிணைந்த நகரம் அமைக்க திட்டமிட்டு, இந்த நிலத்தைகர்நாடக நகர வளர்ச்சித்துறையிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தொழிற்பூங்கா அமைக்க டெண்டர் கோரும் பணிகள் தாமதமாகி உள்ளன.தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதும், தொழிற்பூங்கா பணிகள் விரைவு பெறும் என தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்