கவுன்சிலிங் தேதி, நேரத்தை அறியும் முறை
பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் என அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் புது ஏற்பாட்டையும் மேற்கொண்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2010/), பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு தங்களது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது, கட்ஆப் மதிப்பெண் எவ்வளவு, என்ன பிரிவு உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்களுக்கு எந்த தேதியில், எத்தனை மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் என்ற விவரத்தையும், இதில் சேர்க்க சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, கவுன்சிலிங்கிற்கு பகுதிவாரியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் போது, அந்த விவரங்கள் இணையதளத்திலும் வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவு எண்ணை குறிப்பிட்டு, தங்களுக்கு என்ன தேதியில், எத்தனை மணிக்கு கவுன்சிலிங் நடை பெறும் என்ற விவரத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக இணையதளம் மூலமாகவே அறிந்து கொள்ள முடியும்.