உள்ளூர் செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

திருநெல்வேலி: நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அரசு அனுமதியளித்துள்ளதை கண்டித்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நெல்லை அரசு சட்டக்கல்லூரி இந்திய மாணவர் சங்க மாணவர்கள் ஆகஸ்ட் 28ம் தேதி கல்லூரி முன் மனித சங்கிலியாக கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க தலைவர் உச்சிமாகாளி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்