உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் சமூக வர்த்தக திட்டப் போட்டி

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னோடி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 10 மாணவ அணிகள் தங்களது சமூக வர்த்தக திட்டங்களை காட்சிக்கு வைக்கின்றனர். இந்த கண்காட்சி ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதியன்று சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஜெனிசிஸ் 2011 பட்டத்தை வெல்லும் அணிக்கு 4 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்படும். மேலும், மிகப்பெரிய மூலதன நிறுவனங்களின் நிதியுதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஐஐடி, ஐஐஎம், ஐஐஎப்டி, பிட்ஸ் பிலானி, டிஐஎஸ்எஸ், ஜெபிஐஎம்எஸ், லிபா, டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அன்ட் பொலிடிகல் சயின்ஸ், ஸ்டான்போர்ட் குளோபல் ஸ்கூல் ஆப் பிசினஸ், யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, பெர்கிலி போன்ற கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் இந்த அணிகளில் இடம்பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 28ம் தேதி மாலை நடைபெறும் ஜெனிசிஸ் மாநாட்டில் வெற்றி பெற்றவர்கள் கவுரவிக்கப்படுவார்கள். தொழில்துறை நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்கு கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்