உள்ளூர் செய்திகள்

மதுரை காமராஜ் பல்கலை தேர்வுக்கு விண்ணப்பம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வி இயக்க மாணவர்களுக்கான (நவம்பர் 2011) இளங்கலை, முதுகலை, பி.எட்., எம்.பில்., படிப்புகளுக்கான தேர்வு டிசம்பர் 19 முதல் நடைபெற உள்ளன. இளங்கலை, முதுகலை, தொழிற்சார் பட்டப்படிப்புகள், பி.எட்., எம்.பில்., பட்டப்படிப்புகளுக்கு அக்டோபர் 17ல் விண்ணப்பிக்க வேண்டும். இளங்கலை பாடபிரிவுக்கு டிசம்பர் 19 மற்றும் அனைத்து பாடபிரிவுகளுக்கு டிசம்பர் 26ல் தேர்வுகள் துவங்குகின்றன. தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில் நேரில் அல்லது இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம், என பல்கலை கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சேதுராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்