கோவையில் தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு
மத்திய அரசன் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் கோவையில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு ஆடை தயாரித்தல், டெஸ்க்டாப் பப்ளிசிங், போட்டோஷாப், அக்கவுன்டிங் சாப்ட்வேர், பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, சி.என்.சி. லேத் ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் பயிற்சிகளும், ஆண்களுக்கு மட்டும் சி.என்.சி. லேத் ஆப்பரேட்டர், எலக்ட்ரிசியன் பயிற்சிகளும் அளிக்கப்படும். 8ம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு மெஷினிஸ்ட், பிட்டர், டர்னர், ரெப்ரிஜிரேட்டர், ஏசி பழுது பார்த்தல், செல்போன் பழுது பார்த்தல் பயிற்சியும் அளிக்கப்படும். 5ம் வகுப்பு வரை படித்த ஆண்களுக்கு மோட்டார் சைக்கிள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, பிளம்பர், ஆட்டோ எலெக்ட்ரீசியன் மோட்டார் வைன்டிங் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பெண்களுக்கு செயற்கை நகைகள் தயாரித்தல், பொம்மை தயாரித்தல், பேக்கரி மற்றும் உணவு பொருட்கள் தயாரித்தல், தலைமுடி கலரிங், தலை அலங்காரம், மெகந்தி, அலங்காரம், ஓவியம், துணியில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல குறுகிய கால பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை முடிப்பவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது. பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்புபவர்கள், ஒரு வெள்ளைத் தாளில் முழு விவரங்களையும் எழுதி அதனுடன் ரூ.5க்கான தபால் தலை ஒட்டி, சுய முகவரி எழுதிய 2 உறைகளை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர், அவினாசிலிங்கம் ஜன் சிக்ஷான் சன்ஸ்தான், அழகேசன் ரோடு, கோவை 43.