கல்லூரி கல்வி இயக்குநராக ஐ.ஏ.எஸ் அதிகாரி?
கல்லூரிக் கல்வி இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பொதுவாக தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநராக, கிரேட்1 கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிபவர்களில் அனுபவம் வாய்ந்த, குறைந்தபட்சம் ஒராண்டுகள் பணிக்காலம் உடையவரை நியமிப்பார்கள். இதில் விதிவிலக்காக இரண்டு முறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேப்போல, இந்த முறையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை இயக்குநராக நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் பணி மூப்பு விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதே தமிழக அரசு இந்த முடிவெடுக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.