ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி:ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்
புதுடெல்லி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அளிக்க வகை செய்யும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. லோக்சபாவிலும் விரைவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி வழங்குவதற்கான மசோதா ராஜ்யசபாவில் கடந்தமுறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற முடியாமல் போனது.