கல்விக்கான செலவை குறைக்கும் மாநில அரசுகள்
சமீபத்தில் பி.எச்.டி.சி.சி.ஐ. என்ற சேம்பர் ஆப் காமர்ஸ் நடத்திய ஒரு ஆய்வின் படி கடந்த 12 ஆண்டுகளில் மாநில அரசுகளின் கல்விக்கான செலவு படிப்படியாக குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 1995-96ம் ஆண்டுடன் 2007-08ம் ஆண்டு செலவுகளை ஒப்பிடும் போது மாநில அரசுகளின் கல்விக்கான செலவு கிட்டத்தட்ட 18 சதவீதம் குறைந்துள்ளது. மாநிலங்களுக்கிடையேயான தனி நபர் மீதான கல்விச் செலவு வித்தியாசமும் விரிவடைந் துள்ளது. உதாரணமாக 2005-06ல் பீகாரில் ரூ.487 ஆகவும் உ.பியில் ரூ.483 ஆகவும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.1034 ஆகவும் இ.பி.யில் ரூ.1777 ஆகவும் தனி நபர் கல்விச் செலவு இருந் துள்ளது. ஆரம்பக் கல்வி மற்றும் செகண்டரி அளவில் கல்விக்கான உள் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து குறைந்து வந்துள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளில் பயிற்சி பெற்ற மற்றும் ஊக்க சக்தி பெற்ற ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை காணப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவிலுள்ள வீடுகளில் உள்ளோர் தனியார் பள்ளிகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன் கல்விக்காக செலவிடும் பணமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. நல்ல வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களாகிய கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா போன்றவற்றில் கூட கல்விக்கான அரசின் செலவு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.தற்போதுள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்காகவும் மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.