உள்ளூர் செய்திகள்

‘ஒன்று சேர்ந்து படித்தால் எளிதில் வெற்றி’

வத்தலக்குண்டு: மாணவர்கள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர். டி.வி.ஆர்.,அகாடமி, எஸ்.ஆர்.எம். பல்கலை., சென்னை வழங்கிய ‘தினமலர் ஜெயித்து காட்டுவோம் 2008’ நிகழ்ச்சி வத்தலக் குண்டு டி.எஸ்.எல். கல்யாண மஹாலில் நடந்தது. தேசிய உறுதிமொழியுடன் காலை நிகழ்ச்சிகள் துவங்கின. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை: கணிதம்: சரஸ்வதி(மகாலட்சுமி பெண்கள் மே.நி. ப., வத்தலக்குண்டு): சூத்திரங்களை மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். தேற்றத்திற்கு முக்கியத்துவம் தந்து படியுங்கள். சனி, ஞாயிறு நாட்களில் உங்களுக்கு நீங்களே தேர்வு வைத்து திருத்தி பழகுங்கள். ஆங்கிலம்: ஜேசுராஜாபயஸ் (நேருஜி நினைவு நகராட்சி மே.நி.ப. திண்டுக் கல்): வினாக்களைகவனமாக தேர்வு செய்வது அவசியம். பாடப்புத்தகத்தில் இருந்து பெரும்பாலான வினாக்கள் வரும். முதல் இரண்டு பாடங்களை படித் தால் ஒரு கட்டுரை அவசியம் எழுதலாம். கம்ப் யூட்டர், வேலைக்கு விண்ணப்பிக்கும் கடிதம் வர வாய்ப்புள்ளது. அறிவியல்: புவனேஸ்வரி(மகாலட்சுமி பெண்கள் மே.நி.ப.,வத்தலக்குண்டு): வேறுபாடுகள் மற்றும் பயன்கள் குறித்த கேள்விகளில் அதிக மார்க் பெறலாம். தொடர் பயிற்சி, எழுதியதை திருப்பி பார்த்தல் அவசியம். சமூக அறிவியல்: ராஜா (எம்.எஸ்.பி. சோலைநாடார் மே.நி.ப., திண்டுக் கல்): கிராம பொருளாதார நிலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், காலக்கோடுகள், சுதந்திர போராட்டம் குறித்த கேள்விகளுக்கு முக் கியத்துவம் தாருங்கள். வரலாற்று வரைபடத்தில் டல் ஹௌசி, வெல்லெஸ்லி கால இந்தியா குறித்த கேள்விகள் அடிக்கடி கேட்கப்படுகின்றன. இவ்வாறு ஆலோசனை வழங்கினர். மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனை: ஆங்கிலம்: முருகேசன் (என்.எஸ்.வி.வி., ஆண்கள் மேல்நிலைபள்ளி, பட்டிவீரன்பட்டி): 9 மற்றும் பத்தாம் வகுப்பு இலக்கணங்களை திரும்ப பயிற்சி செய்தால் பிளஸ் 2 இலக்கணத்தை சுலபமாக எழுதலாம். கட்டுரை வினாக்களில் மூன்றுமே தெரிந்த வினாவாக இருந்தால் கடினமான தலைப்பை எழுதினால் அதிக மார்க் பெறலாம்.வேலைக்கு விண் ணப்பம் எழுதும் கடிதத்திற்கு முக்கியத்துவம் தாருங்கள். கணிதம்: சுந்தர பாண்டியன் (எம்.எஸ்.பி., மே.நி. ப., திண்டுக்கல்): திட்டமிட்டும், நண்பர்கள் ஒன்று சேர்ந்தும் படித்தல் நலம். பாடப்புத்தகத்தில் தரப் பட்டுள்ள மாதிரி வினாக்களுக்கு பயிற்சி செய்து பாருங்கள். பாடங்கள் 1,2,3,8 மற்றும் 9ம் பாடங் களை கவனமாக படித்தால் 146 மார்க் எளிதாக பெறலாம். பதில் தருவதற்கு முன் சில நிமிடங்கள் தியானம் செய்வது அவசியம். இயற்பியல்: சாலமோன் ஜேசுராஜ்(அரசு மே.நி.ப., வத்தலக்குண்டு): சமன்பாடுகள், சூத்திரங்கள் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை பலதடவை செய்து பார்க்க வேண்டும். வரையறை, விதிகள், பயன் கள், பண்புகள் தலைப்பில் வினாக்களை தயார் செய்து பதில் எழுதி பழகிக் கொள்ளுங்கள். வேதியியல்: செல்வராணி (மகாலட்சுமி பெண் கள் மேல்நிலைபள்ளி, வத்தலக்குண்டு): பாடங்களை தேர்வு செய்யும் போது குழப்பம் கூடாது. எந்த கேள்வியையும் புறக்கணிக்க கூடாது. தேர்வு குறித்த தாழ்வு மனப் பான்மை வேண்டாம். தாவரவியல் மற்றும் விலங்கியல்: ஜெயக்குமார் (என்.எஸ்.வி.வி., ஆண்கள் மே.நி.ப., பட்டிவீரன் பட்டி): திட்டமிடல், பழைய வினாத்தாள்களுக்கு விடை எழுதி பழக் கம் செய்து கொள்வதால் அதிக மார்க் பெறலாம். இவ்வாறு ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்