உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்குக் கோச்சிங் தரும் இன்ஜினியரிங் மாணவர்கள்!

சாஸ்த்ரா அனுகூல சிக்ஷன் என்ற இத்திட்டத்தின் கீழ், படிப்பில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு ஆர்வம் உள்ள பி.டெக்., எம்.டெக்., படிக்கும் சிறந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுபோன்ற கூடுதல் பயிற்சி தேவைப்படும் மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வழக்கமான வகுப்பு நேரம் தவிர, மற்ற நேரங்களில் இந்த கோச்சிங் நடைபெறும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மற்ற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் மாணவர்களுக்கு அதற்குரிய சன்மானம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது என்று சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர். சேதுராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்