சமூக விரோதிகள் அட்டகாசம்: பீதியில் மாணவிகள்
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.மங்கலம் பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகள் அட்டகாசத்தால், பெண்கள் பீதியில் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்பகுதிகளான 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வியாபார பகுதியாக உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையம் எப்போதும் களைகட்டி இருக்கும். காலை, மாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். போலீசார் ரோந்து வராததால், சமூக விரோதிகள் பேருந்து நிலையத்தில் மாணவிகளை கேலிசெய்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது. காலை, மாலையில் காவலர்களின் ரோந்து அதிகரிக்க, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.