உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் டிப்ஸ்...

சென்னையில் நடந்த ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் கலை, அறிவியல் பாடங்களை நடத்திய இந்து மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய டிப்ஸ்: வணிகவியல் மற்றும் பொருளியல் முதுகலை ஆசிரியர் சீனிவாசன்: வினாக்களுக்கு விடைகளை எழுதும்போது பாயின்ட் பாயின்ட்டாக எழுத வேண்டும். பக்கங்களை நிரப்பினால் மதிப்பெண் கிடைக்காது. புளூ பிரின்ட்டில் உள்ள கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்படும். கூடுமானவரை ஒவ்வொரு பகுதி முடித்துவிட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால், முழுமையான மதிப்பெண் கிடைக்கும். வினாக்களை எந்த இடத்திலும் எழுத வேண்டாம். வணிகக் கணித உதவி தலைமை ஆசிரியர் பத்மநாபன்: தேர்வு ஹாலில், 15 நிமிடம் வினாக்களை படிக்க மற்றும் தேர்வு எண் எழுதுவதற்கு கொடுக்கப்படுகிறது. இதில், 10 நிமிடத்தை என்னென்ன வினாக்களுக்கு பதிலளிக்கப் போகிறோம் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தில் தனியாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்தால், 40 மதிப்பெண் எடுத்து விடலாம். விடைக்கு தேவையான சூத்திரத்தை மறக்காமல் எழுத வேண்டும். சூத்திரத்திற்கு மதிப்பெண் உண்டு. வரைபட கேள்வி, தேர்வுக்கு, அவசியம் வரும். வரைபட தாளை மறக்காமல் விடைத் தாளின் நடுப்பகுதியில் கட்டுவது நல்லது. அப்போதுதான் ‘மிஸ்’ ஆகாது. கால்குலேட்டர் பயன்படுத்துவதால், நான்கு  தசமஸ்தானம் துல்லியாக இருத்தல் அவசியம். வணிகக் கணித பாடத்தின் முதல் மற்றும் கடைசி பாடம் இரண்டையும் தவறாமல் படித்தால், ‘பாஸ்’ மதிப்பெண்ணை எடுத்து விடலாம். 50 சதவீதத்திற்கு மேல், எடுத்துக் காட்டு கணக்கு வருவதால் அவைகளை நன்றாக ‘ஹோம் ஒர்க்’ செய்து பார்க்க வேண்டும். கணினி அறிவியல் ஆசிரியர் ரமேஷ்: மூன்று வகையான வினாக்கள், வினாத் தாளில் இருக்கும். வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ‘சிம்பலை’ ஓ.எம்.ஆர்., ஷீட்டில் பிழை இல்லாமல் குறிப்பிட வேண்டும். முதல் 75 மணித்துளிக்குள் ஒரு மதிப்பெண் வினாக்களை ஓ.எம்.ஆர்., ஷீட்டில் முடித்து விட வேண்டும். மதிப்பெண்கள் அதிகமாக வாங்க வேண்டும் என்றால், புளூ பிரின்ட்டை பார்த்து தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். படங்களுக்கு பிரத்யேகமாக மதிப்பெண் கிடையாது. எனவே, படம் வரைய வேண்டாம். வினாக்களில் என்ன தவறு என்பதை அடிக்கோடு இடுவதோடு மட்டும் அல்லாமல் என்ன தவறு என்பதை எடுத்து எழுத வேண்டும். வெளியீடு என கேட்கப்படும் கேள்விகள், கணினி திரையில் எவ்வாறு வருமோ அவ்வாறே எழுத வேண்டும். கணக்கு பதிவியல் ஆசிரியர் ஸ்ரீராமன்: ஷெசன் ‘ஏ’வில் ஒரு மதிப்பெண்ணுக்கான வினாக்களில், சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, கூட்டாண்மை கடன் மீதான வட்டி இதுபோன்ற வினாக்கள் வரும். ஷெசன் ‘பி’யில் ஐந்து மதிப்பெண் வினாக்களில், 2வது பாடத்தில் விடுபட்ட தகவல்களை காண்க. 4வது பாடத்தில், ஏதேனும் ஒரு விற்பனை விகிதம் கேட்கப்படும்.  உதாரணமாக, நிலை சொத்து விற்பனை விகிதம் அல்லது முதல் விற்பனை விகிதம். ஷெசன் ‘டி’ 20 மதிப்பெண் வினாக்களில், 2வது பாடத்தில் ஒற்றைப் பதிவு முறையிலான இறுதி கணக்குகள் வரும். 4வது பாடத்தில் எவையேனும், 4 விகிதங்கள் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பு நிலை குறித்த அடிப்படையிலான வினாக்கள் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்