உள்ளூர் செய்திகள்

பள்ளியை சுகாதாரமாக வைக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோவை: பள்ளி வளாகத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்வது பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், ‘பள்ளியில் சுகாதாரம் மற்றும் சுகாதாரக் கல்வி’ என்ற தலைப்பில், ஆசிரியர்கள் 240 பேருக்கு நவ. 18ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. ஆறு ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். பள்ளியில் உள்ள கழிவறையை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் சுகாதாரம் பேணிக் காக்கப்படும்;  வகுப்பறையில் குப்பைகள் கிடப்பதைப் பார்த்தால் மாணவர்களை குப்பைக் கூடையில் எடுத்துப் போடச் சொல்லி நல்ல பழக்க வழக்கங்களை வளர்க்க வேண்டும்; பள்ளி குழந்தைகள், தங்களது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சியில் விளக்கப்பட்டது. பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சுகாதார கல்வியை போதிப்பர். அத்துடன் பள்ளிவளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணியிலும் கவனம் செலுத்துவர் என ஆசிரிய பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்