உள்ளூர் செய்திகள்

செவிலியர் பயிற்சி பள்ளிகளில் விண்ணப்பங்கள் வினியோகம்

இப்பயிற்சிக்கு, மாநிலம் முழுவதும் 1650 பேர் சேர்க்கப்படவுள்ளனர். விண்ணப்பத்தின் விலை ரூ.200, எஸ்.சி., எஸ்.டி., மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆக., 22 க்குள், அந்தந்த மையங்களில் வழங்க வேண்டும். அவற்றை அரசு செவிலியர்கள் பள்ளிகள், வரும் ஆக., 23 க்குள் சென்னை மருத்துவத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவிகள், சென்னை இயக்குனரகத்தில் நடைபெறும் "கவுன்சிலிங்"கிற்கு விரைவில் அழைக்கப்படுவர். அப்போது மாணவிகள் விரும்பும் அரசு செவிலியர் பள்ளியில் "சீட்" ஒதுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்